Enable Javscript for better performance
அரையிறுதியில் அக்னீஸ்கா- Dinamani

சுடச்சுட

    
    agniesh

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை சபைன் லிசிக்கி, போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

    லண்டனில் நடைபெற்று வரும் இப்போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காலிறுதியில் சபைன் லிசிக்கி 6-3, 6-3 என்ற நேர் செட்களில் எஸ்தோனியாவின் கயா கனேபியை தோற்கடித்தார். இதன்மூலம் கடந்த 4 ஆண்டுகளில் விம்பிள்டன் அரையிறுதிக்கு இரண்டாவது முறையாக முன்னேறியுள்ளார் லிசிக்கி.

    வெற்றி குறித்துப் பேசிய லிசிக்கி, "அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முன்னர் 3 முறை விம்பிள்டன் காலிறுதியில் விளையாடியிருக்கிறேன். அந்த அனுபவம் இந்தப் போட்டியில் எனக்கு உதவியாக இருந்ததாக நினைக்கிறேன் என்றார். முன்னதாக காலிறுதியில் நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்ûஸ, லிசிக்கி தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

    அக்னீஸ்கா வெற்றி: மற்றொரு காலிறுதியில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா 7-6, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் சீனாவின் லீ நாவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

    திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் 4-வது சுற்று ஆட்டங்களில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச் ஆகியோர் வெற்றி கண்டு காலிறுதிக்கு முன்னேறினர்.

    காலிறுதியில் பயஸ் ஜோடி: ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த ஜோடி திங்கள்கிழமை நடைபெற்ற 3-வது சுற்றில் 6-4, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் போலந்தின் லூகாஸ் குபோட்டா-மார்சின் மட்கோவ்ஸ்கி ஜோடியை தோற்கடித்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai