Enable Javscript for better performance
கான்ஃபெடரேஷன் கோப்பை: பிரேசில் \\\"ஹாட்ரிக்\\\' சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    ஃபிஃபா கான்ஃபெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    உலக சாம்பியனான ஸ்பெயினை 0-3 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி தோற்கடித்தது.

    கான்ஃபெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டி 1992-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்த முறை, 2005-ம் ஆண்டு மாற்றப்பட்டது. அந்த ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்போட்டி நடைபெற்று வருகிறது. 2013-ம் ஆண்டுக்கான போட்டி ஜூன் 15-ம் தேதி தொடங்கியது.

    இப்போட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான பிரேசிலும், ஸ்பெயினும் மோதின. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த ஆட்டம் நடைபெற்றது. இதைக் காண சுமார் 73 ஆயிரத்துக்கும் அதிகமான கால்பந்து ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர்.

    சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் பிரேசில் அணியும், உலக சாம்பியன் அந்தஸ்துடன் ஸ்பெயினும் களமிறங்கின.

    2-வது நிமிடத்திலே பிரேசில் முன்னணி: சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதிய இந்த ஆட்டத்தின் 2-வது நிமிடத்திலேயே பிரேசிலின் ஃப்ரெட் முதல் கோலை அடித்தார். கோல் கம்பத்துக்கு அருகே பந்தை தட்டிச் சென்றபோது ஃப்ரெட் கீழே விழுந்தார். இருப்பினும், ஸ்பெயின் கோல் கீப்பர் கேஸில்லஸ்ûஸ ஏமாற்றி அழகாக முதல் கோலை அடித்து அணியை முன்னிலை பெற வைத்தார்.

    இதைத் தொடர்ந்து அணி அணி வீரர்கள் உற்சாகமடைந்தனர். ஸ்பெயின் வீரர்களால் தடுப்பாட்டத்தில் மட்டுமே ஈடுபட முடிந்தது. ஆட்டத்தின் முதல் பாதி முடிவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன்னால், பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் அசத்தலாக ஒரு கோல் அடித்தார்.

    இடைவேளையைத் தொட ர்ந்து ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் ஃப்ரெட் மீண்டும் ஒரு கோல் அடிக்க பிரேசில் அணி 3-0 என்ற முன்னிலை பெற்றது. அதன் பின்னர்,  இறுதிவரை போராடியும் ஸ்பெயின் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் பிரேசில் அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

    ஸ்பெயினின் துரதிருஷ்டம்: இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணி சிறப்பாக விளையாடியபோதும் ஒரு கோல்கூட அடிக்க முடியாமல் தோல்வியைத் தழுவியது. ஆட்டத்தின் 2-வது பாதியில் அந்த அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்து.

    ஆனால், அதை கோலாக்கத் தவறிவிட்டார் அந்த அணியின் செர்ஜியோ ரமோஸ். அதேபோல், ஸ்பெயினின் முன்கள ஆட்டக்காரரான டேவிட் வில்லா, கோல் கம்பத்தை நோக்கி அடித்தபோது, அதை பிரேசில் கோல்கீப்பர் ஜூலியோ சீசர் அற்புதமாகத் தடுத்து ஸ்பெயினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்.

    அடுத்த ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடக்கவுள்ள நிலையில், உலகச் சாம்பியனாக உள்ள ஸ்பெயினுக்கு இந்த ஆட்டத்தின் முடிவு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    இத்தாலிக்கு 3-ம் இடம்: அரையிறுதியில் தோல்வியைத் தழுவிய இத்தாலி அணியும், உருகுவே அணியும் 3-ம் இடத்துக்கான ஆட்டத்தில் விளையாடின. இதில் இத்தாலி அணி 3-2 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

     

    தங்க விருதுகள்

    கான்ஃபெடரேஷன் கால்பந்து போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு தங்கத்திலான பூட்ஸ், பந்து மற்றும் கையுறை வழங்கப்படும். இம்முறை தங்க பூட்ûஸக் கைப்பற்றியவர் ஸ்பெயினின் ஃபெர்னாண்டோ டாரஸ். இப்போட்டியில் அவர் 5 கோல்களை அடித்தார். வெள்ளி பூட்ûஸ பிரேசிலின் ஃப்ரெட்டும், வெண்கல பூட்ûஸ பிரேசிலின் நெய்மரும் வென்றனர். தங்க பந்துக்கான விருதை நெய்மர் கைப்பற்றினார்.

    வெள்ளி பந்தை ஸ்பெயினின் இனிஸ்டாவும், வெண்கலப் பந்தை பிரேசிலின் பெüலினோவும் வென்றனர்.தங்கக் கையுறை விருதை பிரேசில் அணியின் கோல்கீப்பர் ஜூலியோ சீசர் பெற்றனர். சிறப்பாக விளையாடிய அணிக்கான விருது, ஸ்பெயினுக்கு கிடைத்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai