Enable Javscript for better performance
செய்திகள் சில வரிகளில்...- Dinamani

சுடச்சுட

    

    * கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் மகளிர் குண்டு எறிதல் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனை ஒருவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. எனினும் அந்த வீராங்கனையின் பெயரை தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பான "நாடா' வெளியிடவில்லை.

    * 2013-14-ம் ஆண்டுக்கான ரஞ்சி போட்டிகள் அனைத்தும் வார இறுதி நாள்களில் நடைபெறும். ஒரு போட்டிக்கும், மற்றொரு போட்டிக்கும் இடையில் 4 நாள்கள் இடைவெளி இருக்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

    * அடுத்த மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டிக்காக 48 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான சந்தீப் சிங், சிவேந்திரா சிங் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

    * பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் கதவை திறக்க முயற்சித்து, பயணிகளை பீதிக்குள்ளாக்கியதாக இலங்கை "ஏ' அணி வீரர் ரமித் ரம்புக்வெல்லா மீது எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai