Enable Javscript for better performance
தரங்கா, ஜெயவர்த்தனா சதம்: இலங்கை 348 ரன்கள் குவிப்பு- Dinamani

சுடச்சுட

    
    tharanga

    முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 50 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் குவித்தது.

    அந்த அணியில் உபுல் தரங்கா-ஜெயவர்த்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 38.4 ஓவர்களில் 213 ரன்கள் குவித்தது.

    ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார்.

    இதையடுத்து பேட் செய்த இலங்கை அணியில் ஜெயவர்த்தனாவும், உபுல் தரங்காவும் இணைந்து 213 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கம் ஏற்படுத்தினர். ஒருநாள் போட்டியில் 16-வது சதமடித்த ஜெயவர்த்தனா, 112 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து தரங்காவுடன் இணைந்தார் கேப்டன் மேத்யூஸ். இந்த ஜோடி அதிரடியாக விளையாட 50 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் குவித்தது இலங்கை. தரங்கா 159 பந்துகளில் 3 சிக்ஸர், 19 பவுண்டரிகளுடன் 174, மேத்யூஸ் 29 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    தரங்கா 5,000: இந்த ஆட்டத்தில் 21 ரன்கள் எடுத்தபோது தரங்கா 5,000 ரன்களை எட்டினார். 164-வது போட்டியில் அவர் இந்த ரன்களை எட்டியுள்ளார். இந்த ஆட்டத்தில் எடுத்த 174 ரன்கள்தான் ஒருநாள் போட்டியில் தரங்காவின் அதிகபட்ச ரன்னாகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai