ஆசிய குத்துச்சண்டை: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மாலிக்
By dn | Published on : 04th July 2013 12:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் விகாஸ் மாலிக் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடைபெற்று வரும் இப்போட்டியில் 60 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றுள்ள மாலிக், ஆப்கானிஸ்தானின் நூரிஸ்தானி கைபரை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
அதேநேரத்தில் இந்தியாவின் மற்றொரு முன்னணி வீரரான ஜக்ரூப் சிங் (81 கிலோ எடைப் பிரிவு) முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.