Enable Javscript for better performance
ஜிம்பாப்வே தொடர்: இந்திய அணி நாளை அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஜிம்பாப்வேக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி மும்பையில் வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்படுகிறது.

    தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டில் தலைமையிலான தேர்வுக்குழுவினர் மும்பையில் கூடி அணியை தேர்வு செய்யவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    தசைப்பிடிப்பு காரணமாக முத்தரப்புத் தொடரிலிருந்து விலகியுள்ள கேப்டன் தோனி, ஜிம்பாப்வே தொடரில் இடம்பெறுவாரா என்பது தெரியவில்லை.

    5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 24 முதல் ஜிம்பாப்வேயில் தொடங்குகிறது.

    முதல் 3 ஆட்டங்கள் ஜூலை 24, 26, 28 ஆகிய தேதிகளில் ஹராரேவிலும், கடைசி இரு ஆட்டங்கள் ஜூலை 31, ஆகஸ்ட் 3 ஆகிய தேதிகளில் புலவாயோ நகரிலும் நடைபெறுகின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai