Enable Javscript for better performance
ஃபிஃபா தரவரிசை: 9-வது இடத்துக்கு முன்னேறியது பிரேசில்- Dinamani

சுடச்சுட

    

    சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (ஃபிஃபா) தரவரிசையில் பிரேசில் அணி 12 இடங்கள் முன்னேறி, 9-வது இடத்தைப் பிடித்துள்ளது.

    தாய்நாட்டில் நடைபெற்ற கான்ஃபெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் அதிரடி முன்னேற்றம் கண்டுள்ளது பிரேசில். கான்ஃபெடரேஷன் கோப்பை போட்டிக்கு முன்னதாக பிரேசில் அணி 22-வது இடத்தில் இருந்தது.

    எனினும் பிரேசில் அணி தற்போதைய 9-வது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

    ஏனெனில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக அந்த அணிக்கு எந்த சர்வதேசப் போட்டியும் இல்லை. அதேநேரத்தில் தரவரிசையில் முன்னணியில் உள்ள மற்ற அணிகள், உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் குறைந்தபட்சம் 4 ஆட்டங்களில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஸ்பெயின் தொடர்ந்து முதலிடம்: கான்ஃபெடரேஷன் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் பிரேசிலிடம் தோற்றபோதும், தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது ஸ்பெயின்.

    ஜெர்மனி 2-வது இடத்திலும், கொலம்பியா அணி 4 இடங்கள் முன்னேற்றம் கண்டு 3-வது இடத்திலும் உள்ளன.

    கொலம்பியா அணிக்கு இது சிறந்த தரவரிசையாகும். ஆர்ஜென்டீனா, நெதர்லாந்து அணிகள் முறையே 4 மற்றும் 5-வது இடங்களைப் பிடித்துள்ளன.

    கான்ஃபெடரேஷன் கோப்பையில் 3-வது இடம்பிடித்த இத்தாலி அணி 6-வது இடத்தில் உள்ளது. போர்ச்சுக்கல் 7-வது இடத்திலும், குரேஷியா 8-வது இடத்திலும் உள்ளன.

    இங்கிலாந்துக்கு பின்னடைவு: பெல்ஜியம் அணி, முதல்முறையாக 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உருகுவே அணி 7 இடங்கள் முன்னேற்றம் கண்டு தற்போது 12-வது இடத்தைப் பிடித்துள்ளது.

    அதேநேரத்தில் முதல் 10 இடங்களுக்குள் இருந்த இங்கிலாந்து அணி, தற்போது அதை இழந்துள்ளது. 6 இடங்களை இழந்துள்ள இங்கிலாந்து, 15-வது இடத்தில் உள்ளது.

    146-வது இடத்தில் இந்தியா: ஜப்பான் அணி 37-வது இடத்தில் உள்ளது. இதன்மூலம் ஆசிய அணிகள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அணி 146-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்

    தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai