ஆசிய குத்துச்சண்டை: காலிறுதியில் மனோஜ்
By dn | Published on : 05th July 2013 02:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மனோஜ் குமார், மன்தீப் ஜங்ரா, சுக்தீப் சிங் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆடவர் 64 கிலோ எடைப் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் மனோஜ் குமார், இலங்கையின் முகமது தில்ஷானை வீழ்த்தி காலிறுதியை உறுதி செய்தார். காலிறுதியில் மலேசியாவின் அர்மி கிர்ரை சந்திக்கிறார் மனோஜ் குமார்.
இதேபோல் இந்தியாவின் மன்தீப் ஜங்ரா (69 கிலோ எடைப் பிரிவு), லெபனானின் அந்தார் கோடாரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மன்தீப், தனது காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் நோதிர்பெக் கோஸிமூவை சந்திக்கிறார்.
மற்றொரு இந்தியரான சுக்தீப் சிங், கொரியாவின் கிம் டச்வானை வீழ்த்தினார். காலிறுதியில் தஜிகிஸ்தானின்
ஜஃபோயேவ் நவ்ரூûஸ சந்திக்கிறார் சுக்தீப் சிங்.