ஜிம்பாப்வே தொடர்: இந்திய அணி இன்று தேர்வு
By dn | Published on : 05th July 2013 02:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஜிம்பாப்வேக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி மும்பையில் வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்படுகிறது.
தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வரும் கேப்டன் தோனி உள்ளிட்ட மூத்த வீரர்கள் சிலருக்கு தேவைப்படும் பட்சத்தில் இந்தத் தொடரில் ஓய்வளிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்திய வீரர்கள், கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
அதனால் ஜிம்பாப்வே தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வளிப்பது குறித்து தேர்வுக்குழுவினர் ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிம்பாப்வே தொடரில் தோனிக்கு ஓய்வளிக்கப்படும் பட்சத்தில், விராட் கோலி தலைமையில் இந்திய அணி விளையாடும்.
தோனி இடம்பெறாத பட்சத்தில், அனுபவ வீரர்கள் இந்திய அணிக்கு தேவை என்பதைக் கருத்தில் கொண்டு கெüதம் கம்பீர் மீண்டும் அணிக்கு அழைக்கப்படலாம்.
வேகப்பந்து வீச்சாளர்களில் சிலருக்கு ஓய்வளிக்கும் பட்சத்தில் இர்ஃபான் பதான், சமி அஹமது ஆகியோர் ஜிம்பாப்வே தொடரில் இடம்பெற வாய்ப்புள்ளது. பிரவீண் குமார் மீண்டும் அணிக்கு அழைக்கப்படலாம்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மனோஜ் திவாரி காயம் காரணமாக 4 மாதங்கள் கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் காயத்திலிருந்து மீண்டுள்ள சேதேஷ்வர் புஜாரா மிடில் ஆர்டரில் இடம்பெற வாய்ப்புள்ளது. மற்றபடி அணியில் எந்த மாற்றமும் இருக்காது.
இந்திய-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 24-ம் தேதி ஜிம்பாப்வேயில் தொடங்குகிறது. முதல் 3 ஆட்டங்கள் ஹராரே நகரிலும், அடுத்த இரு ஆட்டங்கள் புலவாயோ நகரிலும் நடைபெறுகின்றன.