Enable Javscript for better performance
வாழ்வா, சாவா ஆட்டத்தில் மே.இ.தீவுகளை இன்று சந்திக்கிறது இந்தியா- Dinamani

சுடச்சுட

    

    வாழ்வா, சாவா ஆட்டத்தில் மே.இ.தீவுகளை இன்று சந்திக்கிறது இந்தியா

    By dn  |   Published on : 05th July 2013 02:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முத்தரப்புத் தொடரில் வெள்ளிக்கிழமை நடைபெறும் வாழ்வா, சாவா ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை சந்திக்கிறது இந்தியா.

    முதல் இரு ஆட்டங்களில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கையிடம் தோல்வி கண்ட இந்திய அணி, போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே இறுதி ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை தக்கவைக்க முடியும்.

    மாறாக இந்தியா தோற்றால் மேற்கிந்தியத் தீவுகள் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிவிடும். அதேநேரத்தில் இந்தியாவின் இறுதி ஆட்ட வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும்.

    எனவே இந்த ஆட்டத்தில் மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அணி களம் காண்கிறது.

    இந்திய அணி வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்தாலும், கடந்த ஆட்டங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இந்த ஆட்டத்தில் முரளி விஜய்க்கு வாய்ப்பு கிடைப்பது கடினமே. அவருக்குப் பதிலாக அம்பட்டி ராயுடு சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித், தவன், கோலி, ரெய்னா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்ட முடியும்.

    பந்துவீச்சைப் பொறுத்தவரையில் இந்த ஆட்டத்தில் சமி அஹமதுவுக்குப் பதிலாக புவனேஸ்வர் குமார் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில், அந்த அணியின் பெரும் பலமாகத் திகழ்கிறார்.

    இந்த ஆட்டத்தில் இந்திய பெüலர்களுக்கு அவர் பெரும் சவாலாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இதேபோல் சார்லஸ், மார்லான் சாமுவேல்ஸ், கிரண் போலார்ட் என பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை அந்த அணி கொண்டுள்ளது.

    காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடாத அந்த அணியின் கேப்டன் டுவைன் பிராவோ, இந்த ஆட்டத்தில் பங்கேற்பார் என்று தெரிகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai