Enable Javscript for better performance
ஆசிய குத்துச்சண்டை: காலிறுதியில் சிவ தாபா- Dinamani

சுடச்சுட

    

    ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சிவ தாபா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடைபெற்று வரும் இப்போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிவ தாபா (56 கிலோ எடை), சீன தைபேவின் லீ லின் யென்னை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் கஜகஸ்தானின் கைரட் எராலியேவை சந்திக்கிறார் சிவ தாபா.

    இதேபோல் மற்றொரு இந்திய வீரரான தேவேந்திரோ சிங்கும் (49 கிலோ எடை), காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அவர், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாடாமலேயே காலிறுதியில் பங்கேற்க நேரடித் தகுதி பெற்றார். தேவேந்திரோ சிங், தனது காலிறுதிச் சுற்றில் உஸ்பெகிஸ்தானின் நோதிர்ஜோன் மிர்ஸôக்மெத்தோவை சந்திக்கிறார்.

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய வீரர் தினேஷ் குமார் (91 கிலோ எடை), மதன்லால் (52 கிலோ), சதீஷ் குமார் (91 கிலோவுக்கு மேற்பட்ட எடை) ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.

    இந்தியாவின் மனோஜ் குமார், மன்தீப் ஜங்ரா, சுக்தீப் சிங் ஆகியோர் ஏற்கெனவே காலிறுதிக்கு முன்னேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai