Enable Javscript for better performance
ஆசிய பளுதூக்குதல்: இந்தியாவுக்கு 2 பதக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிய பளுதூக்குதல் போட்டியின் முதல் நாளில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரு பதக்கங்கள் கிடைத்துள்ளன.

    20-வது மகளிர் மற்றும் 27-வது ஆடவர் ஆசிய ஜூனியர் பளுதூக்குதல் போட்டி கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கெக்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், மகளிர் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு, ஒட்டுமொத்தமாக 165 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    மகளிர் 46 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அபூர்வா சேத்தியா 230 கிலோ எடையைத் தூக்கி வெண்கலம் வென்றார்.

    இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் 6 வீரர்கள், 7 வீராங்கனைகள் என மொத்தம் 13 பேர் பங்கேற்றுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai