Enable Javscript for better performance
ஆயுர்வேத சிகிச்சை: கேரளம் செல்கிறார் கிருஷ்ணா பூனியா- Dinamani

சுடச்சுட

    
    poonia

    இந்திய வட்டு எறிதல் வீராங்கனை கிருஷ்ணா பூனியா, தொடைப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக கேரளம் செல்கிறார்.

    புணேவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் வட்டு எறிதல் பிரிவில் 4-வது இடத்தைப் பிடித்த கிருஷ்ணா பூனியா இது தொடர்பாக கூறியதாவது:

    பாட்டியாலா என்.ஐ.எஸ். மையத்தில் உள்ள "சாய்' (இந்திய விளையாட்டு ஆணையம்) மருத்துவர்கள் 21 நாள்கள் முழுவதுமாக ஓய்வெடுக்குமாறு அறிவுரை கூறியுள்ளனர். உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு கிடைப்பது மிகவும் சிறந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன். கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சையும் மேற்கொள்ள இருக்கிறேன்.

    காயத்திலிருந்து குணமடைந்து கொண்டிருந்த நேரத்தில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வேண்டுமென்று விரும்பியதால், வலி நிவாரணி ஊசியைப் பயன்படுத்தினேன். அதன்பிறகு போட்டியில் பங்கேற்றேன். இப்போது முழு ஓய்வு எடுக்க உள்ளேன் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai