உலக கராத்தே: இந்தியாவுக்கு 2 வெண்கலம்
By dn | Published on : 06th July 2013 01:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு இரு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
உலக கராத்தே சம்மேளன இளையோர் கோப்பை மற்றும் உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் கிரீஸின் கோர்ஃபு நகரில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் 8 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. இதில், குமிட்டி சப்-ஜூனியர் பிரிவில் இந்தியாவின் பிரணய் சர்மா (50 கிலோ எடைப் பிரிவு) வெண்கலம் வென்றார். இதேபோல் கட்டா சப்-ஜூனியர் பிரிவில் இந்தியாவின் கார்ல் வட்சவா வெண்கலம் வென்றுள்ளார்.
இந்தப் போட்டியின்போது நடைபெற்ற உலக கராத்தே சம்மேளன (டபிள்யூ.கே.எஃப்) பயிற்சியாளர் தேர்வில், இந்திய கராத்தே சம்மேளன பொதுச் செயலர் சிஹான் பரத் சர்மா தேர்ச்சி பெற்றார்.
இதன்மூலம் டபிள்யூ.கே.எஃப் சான்றிதழ் பெற்ற இந்தியாவின் முதல் குமிட்டி பயிற்சியாளர் என்ற பெருமையை பரத் சர்மா பெற்றுள்ளார் என்று அகில இந்திய கராத்தே டூ சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.