பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கனேரியாவுக்கு வாழ்நாள் தடை
By dn | Published on : 06th July 2013 01:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியாவுக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.
2009-ம் ஆண்டு இங்கிலிஷ் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடியபோது கனேரியா ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியிருப்பதாவது:
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (இசிபி) கனேரியாவுக்கு வாழ்நாள் தடை விதித்திருந்தது. அதை எதிர்த்து கனேரியா மேல்முறையீடு செய்தார்.
ஆனால் இசிபியின் மேல்முறையீட்டு குழு, கனேரியாவின் மனுவை சமீபத்தில் நிராகரித்தது.
இசிபியின் முடிவை ஏற்று, கனேரியாவுக்கு பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகள் நடத்தும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட கனேரியாவுக்கு தடைவிதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக கனேரியா கூறுகையில், "எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னை பலிகடாவாக்க முயற்சிக்கிறது. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க தொடர்ந்து போராடுவேன்' என்றார்.