Enable Javscript for better performance
முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: இந்தியா-210/5- Dinamani

சுடச்சுட

    
    dhawan

    முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 39.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்திருந்தது.

    டிரினிடாட் அன்ட் டொபாக்கோ தலைநகர் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் கேப்டன் டுவைன் பிராவோ மீண்டும் அணிக்குத் திரும்பினார். கடந்த ஆட்டத்தில் அவர் காயம் காரணமாக விளையாடவில்லை.

    இந்திய அணியில் சமி அஹமதுக்குப் பதிலாக புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டார். மற்றபடி எந்த மாற்றமும் இல்லை. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் பிராவோ, இந்தியாவை பேட் செய்ய அழைத்தார்.

    ஷிகர் தவன் 69: இதையடுத்து பேட் செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா-ஷிகர் தவன் ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது.

    இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 23.1 ஓவர்களில் 123 ரன்கள் சேர்த்தது. சுனில் நரேன் வீசிய 23-வது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விரட்டிய ஷிகர் தவன், கெமர் ரோச் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 77 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து ரோஹித் சர்மாவுடன் இணைந்தார் கேப்டன் கோலி.

    மறுமுனையில் அரை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா, 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 78 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார்.

    பின்னர் வந்த ரெய்னா 10, தினேஷ் கார்த்திக் 6 ரன்களில் ஆட்டமிழக்க, முரளி விஜய் களம்புகுந்தார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய விஜய், 18 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அப்போது இந்தியா 39.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 35 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai