Enable Javscript for better performance
விம்பிள்டன் இறுதிச் சுற்றில் ஜோகோவிச்- Dinamani

சுடச்சுட

    
    tenn

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் ஜோகோவிச், 4 மணி நேரம், 43 நிமிட போராட்டத்துக்குப் பிறகு 7-5, 4-6, 7-6 (2), 6-7 (6), 6-3 என்ற செட் கணக்கில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவை வீழ்த்தி, சாதனை வெற்றி கண்டார். விம்பிள்டன் வரலாற்றில் அதிக நேரம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் இதுதான்.

    இதற்கு முன்னர் 1989 விம்பிள்டன் போட்டியின் அரையிறுதியில் போரீஸ் பெக்கர்-இவான் லென்டல் மோதிய ஆட்டம் 4 மணி நேரம், ஒரு நிமிடம் நடைபெற்றதே அதிக நேரம் நடைபெற்ற ஆட்டமாக இருந்தது.

    தொடர்ச்சியாக 13 கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிகளில் விளையாடியுள்ள ஜோகோவிச், 11-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர், இந்த முறை பட்டம் வெல்லும் பட்சத்தில் 7-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றுவார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai