Enable Javscript for better performance
ஆசிய பளுதூக்குதல்: இந்தியாவுக்கு 4 பதக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிய ஜூனியர் பளுதூக்குதல் போட்டியின் 2-வது நாளான சனிக்கிழமை இந்தியாவுக்கு 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்கள் கிடைத்தன.

    20-வது மகளிர் மற்றும் 27-வது ஆடவர் ஆசிய ஜூனியர் பளுதூக்குதல் போட்டி கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கெக்கில் நடைபெற்று வருகிறது.

    இதில் 2-வது நாளான சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் 85 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் விகாஸ் தாக்குர் கிளீன் அன்ட் ஜெர்க் மற்றும் ஒட்டுமொத்த எடைப் பிரிவுகளில் வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்னாட்ச் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

    இதேபோல் இந்தியாவின் நீரஜ் சர்மா, ஸ்னாட்ச் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இந்தப் போட்டியின் முதல் இரண்டு நாள்களில் இந்தியா 8 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai