Enable Javscript for better performance
செய்திகள் சில வரிகளில்...- Dinamani

சுடச்சுட

    

    * ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மனோஜ் குமார், தேவேந்திரோ சிங், சிவ தாபா, மன்தீப் ஜங்ரா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

    * இந்திய ஒலிம்பிக் சங்க (ஐஓஏ) தேர்தலை ஒரு மாதம் தள்ளி வைத்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி). முன்னதாக செப்டம்பர் 1-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என ஐஓசி கூறியிருந்தது.

    * ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளர்கள் குழுவில் இந்தியாவின் ரவி சாஸ்திரி இடம்பெறாததற்கு நாங்கள் காரணமல்ல என்று ஐசிசி தெரிவித்துள்ளது. முன்னதாக டி.ஆர்.எஸ். முறைக்கு ரவி சாஸ்திரி எதிர்ப்புத் தெரிவித்ததால், அவரை வர்ணனை

    யாளர்கள் குழுவில் சேர்க்கக்கூடாது என ஐசிசி உத்தரவிட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியானது.

    * ஜெர்மனியில் நடைபெற்ற ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியின்போது இந்திய வீரர்கள் இருவர், சகவீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தது தொடர்பான குற்றச்சாட்டு குறித்த விசாரணை முடிந்துவிட்டதாக விசாரணைக் குழு தலைவரான அஞ்சலி பாகவத் தெரிவித்துள்ளார்.

    * 1983 உலகக் கோப்பை போட்டியில் விளையாடிவிட்டு நாடு திரும்புகையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத் உள்ளிட்ட இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் லண்டனில் உள்ள ஹெத்ரோ விமான நிலையத்தில் 2 மணி நேரம் சிறை வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. கீர்த்தி ஆசாத்தின் பெயரில் உள்ள ஆசாத் என்ற பெயரின் காரணமாகவே அவர் மீது விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai