Enable Javscript for better performance
விம்பிள்டன்: மரியோன் பர்டோலி சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    
    tennis

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸின் மரியோன் பர்டோலி சாம்பியன் பட்டம் வென்றார்.

    லண்டனில் நடைபெற்று வரும் இப்போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் மரியோன் பர்டோலி 6-1, 6-4 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் சபைன் லிசிக்கியை வீழ்த்தினார்.

    28 வயதாகும் மரியோன் பர்டோலிக்கு இதுதான் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம். பர்டோலி, "ஓபன் எராவில்' முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 5-வது அதிக வயதுடைய வீராங்கனையாவார்.

    2007-ல் நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய பர்டோலி, அதில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸிடம் தோல்வி கண்டார். அதன்பிறகு 6 ஆண்டுகள் கழித்து இப்போது விம்பிள்டனில் வாகை சூடியுள்ளார்.

    தனது 47-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள பர்டோலி, "உண்மையைச் சொல்வதானால் இந்தப் போட்டியில் பட்டம் வென்றதை என்னால் நம்ப முடியவில்லை. எனது இளம் வயது கனவு நீண்ட நாள்களுக்குப் பிறகு இப்போது நனவாகியுள்ளது' என்றார்.

    பட்டம் வெல்வது யார்?

    ஜோகோவிச்-முர்ரே இன்று மோதல்

    ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், பிரிட்டனின் ஆன்டி முர்ரேவும் மோதுகின்றனர்.

    ஜோகோவிச் பட்டம் வெல்லும் பட்சத்தில், விம்பிள்டனில் அவருக்கு இது 2-வது பட்டமாக அமையும். முர்ரே பட்டம் வெல்லும் பட்சத்தில் 77 ஆண்டுகளுக்குப் பிறகு விம்பிள்டனில் பட்டம் வென்ற முதல் பிரிட்டன் வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai