Enable Javscript for better performance
ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரம்: ராஜஸ்தான் வீரர் ஹர்மீத் சிங்கிடம் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரம்: ராஜஸ்தான் வீரர் ஹர்மீத் சிங்கிடம் விசாரணை

    By dn  |   Published on : 07th July 2013 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஹர்மீத் சிங்கிடம் பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் ரவி சவானி, சனிக்கிழமை விசாரணை நடத்தினார். இந்த விசாரணை 1 மணி நேரம், 30 நிமிடங்கள் நடைபெற்றது.

    இதை பிசிசிஐயின் மூத்த நிர்வாகிகளும் உறுதி செய்துள்ளனர். விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. போலீஸ் காவலில் உள்ள அஜித் சாண்டிலாவிடம் மட்டுமே விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

    எனவே அவர் விடுதலையாவதை எதிர்பார்த்து பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவு காத்திருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அஜித் சாண்டிலா, ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபடுமாறு "புக்கி'களுடன் சேர்ந்து தன்னை அணுகியதாகவும், ஆனால் அதை தான் ஏற்க மறுத்துவிட்டதாகவும் சமீபத்தில் தில்லி போலீஸôரிடம் ஹர்மீத் சிங் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்தே இப்போது அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

    6-வது ஐபிஎல் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணியின் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கித் சவாண் ஆகியோரும், 20-க்கும் மேற்பட்ட சூதாட்டத் தரகர்களும் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai