Enable Javscript for better performance
ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதி- Dinamani

சுடச்சுட

    

    ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மனோஜ் குமார், சிவ தாபா, மன்தீப் ஜங்ரா, தேவந்திரோ சிங் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

    இதன்மூலம் இந்தியாவுக்கு 4 வெண்கலப் பதக்கம் உறுதியாகியுள்ளது. இந்திய வீரர்கள் 4 பேரும் ஆசிய அளவிலான போட்டிகளில் வெல்லும் முதல் பதக்கம் இதுதான்.

    ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆடவர் 64 கிலோ எடைப் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மனோஜ் குமார், மலேசியாவின் ஆர்மி கிர்ரை வீழ்த்தினார். அரையிறுதியில் மங்கோலியாவின் உரஞ்சிமீயா முங்க் எர்டீனை சந்திக்கிறார் மனோஜ் குமார். சிவ தாபா (54 கிலோ) கஜகஸ்தானின் கைரத் எராலியேவை வீழ்த்தினார். இதன்மூலம் முந்தைய போட்டிகளில் கைரத்திடம் இரு முறை கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் சிவ தாபா. அரையிறுதியில் கிர்கிஸ்தானின் மால்பெகோவ் ஓமுர்பெக்கை சந்திக்கிறார் சிவ தாபா.

    காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் நோதிர்ஜோனை வீழ்த்திய இந்தியாவின் தேவேந்திரோ சிங் (49 கிலோ), அரையிறுதியில் சீனாவின் எல்.வி.பீனை சந்திக்கிறார். மற்றொரு இந்திய வீரரான மன்தீப் ஜங்ரா (69 கிலோ), தனது அரையிறுதியில் மங்கோலியாவின் ஜர்காலை சந்திக்கிறார். அதேநேரத்தில் இந்தியாவின் சுக்தீப் சிங் காலிறுதியில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai