Enable Javscript for better performance
ஐ.ஏ.ஏ.எஃப். டைமன்ட் லீக்: கெளடாவுக்கு 4-வது இடம்- Dinamani

சுடச்சுட

    
    Vikasgowda

    ஐ.ஏ.ஏ.எஃப். டைமன்ட் லீக் தடகள தொடரின் 9-வது சுற்றில் ஆடவர் வட்டு எறிதலில் இந்தியாவின் விகாஸ் கௌடா 4-வது இடத்தைப் பிடித்தார்.

    சர்வதேச தடகள சம்மேளனத்தின் (ஐஏஏஎஃப்) டைமன்ட் லீக் தடகளத் தொடரின் 9-வத சுற்று பிரான்ஸில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

    இதில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் வட்டு எறிதலில் பங்கேற்ற இந்தியாவின் விகாஸ் கெüடா, தனது 3-வது முயற்சியில் 64.45 மீ. தூரம் வட்டு எறிந்து, 4-வது இடத்தைப் பிடித்தார். இவர், புணேவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரிவில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒலிம்பிக் மற்றும் உலகச் சாம்பியனான ராபர்ட் ஹார்ட்டிங் (67.04 மீ. தூரம்) தங்கமும், லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரான ஈரானின் இஷான் ஹடாடி (65.53 மீ.) வெள்ளிப் பதக்கமும், எஸ்தோனியாவின் ஜெர்டு கன்டர் (65.30 மீ.) வெண்கலமும் வென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai