Enable Javscript for better performance
கடல்ஆமை இறைச்சி விற்க முயற்சி: 6 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    
    kada

    தூத்துக்குடியில் அரியவகை கடல் ஆமை இறைச்சியை விற்க முயன்றதாக 6 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் அதிகளவில் வாழ்கின்றன. அவற்றில் கடல் ஆமையும் ஒன்று. கடல் ஆமை எண்ணிக்கை குறைந்துவருவதால் இவற்றைப் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகப் பகுதியில் தடைசெய்யப்பட்ட கடல் ஆமைகள் பிடித்து வரப்படுவதாக மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய காப்பக அதிகாரிகளுக்குத் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் ரகசிய கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் சிலர், கடல் ஆமையை இறைச்சி விற்பனைக்காக வெட்டிக் கொண்டிருந்தனர். அதை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த விஜயன், நசரேன், பெலிக்ஸ், பாலமுருகன், தாமஸ், ஜார்ஜ் ஆகிய 6 பேரை வனத் துறையினர் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கடல்ஆமை 100 கிலோ எடை இருக்கும் என்றும் கடல்ஆமைகளின் இறைச்சி மருத்துவக் குணம் கொண்டது என்றும், தடையை மீறி கடல்ஆமை போன்ற அரியவகை உயிரினங்களைப் பிடிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத் துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai