Enable Javscript for better performance
கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு- Dinamani

சுடச்சுட

    
    deer

    உத்தரமேரூர் அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்கப்பட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது.

    உத்தரமேரூர் பேரூராட்சிக்கு உள்பட்ட வேடபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். அவரது வயலில் உள்ள கிணற்றில் சுமார் 6 வயது மதிக்கத் தக்க ஆண் புள்ளி மான் தவறி விழுந்தது.

    தகவல் அறிந்த உத்தரமேரூர் தீயணைப்பு வீரர்கள், மதுராந்தகம் வனச்சரக அலுவலர் கோபு, வனவர் ராஜ்குமார், வனக்காப்பாளர் செல்வராஜ், வனக்காவலர் ரவிக்குமார் உள்ளிட்டோர் சென்று மானை மீட்டனர்.

    மானின் உடம்பில் காயம் ஏற்பட்டிருந்ததால், உத்தரமேரூர் கால்நடை மருத்துவர்கள் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மான் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai