Enable Javscript for better performance
தோனிக்கு வயது 32!- Dinamani

சுடச்சுட

    
    dhoni

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, ஞாயிற்றுக்கிழமை 32-வது பிறந்த நாளாகும்.

    அதையொட்டி உறவினர், நண்பர்கள் என ஏராளமானோர் தோனிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இந்தியாவுக்காக மேலும் பல போட்டிகளில் வெற்றிகளைக் குவிக்குமாறு ஏராளமானோர் வாழ்த்தியுள்ளனர்.

    சில இடங்களில் ரசிகர்கள் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் தோனியின் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளனர்.

    தோனிக்கு வாழ்த்துத் தெரிவித்த அவருடைய முன்னாள் பயிற்சியாளரான சஞ்சால் பட்டாசார்யா, "தோனியின் குடும்பத்தினர் அவருடைய பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடியதாக' குறிப்பிட்டார்.

    இளம் பாடகியான ரோஹன் டியோ பதாக், தோனியைப் பாராட்டி இரு பாடல்களை பாடியுள்ளார். அதற்கு "யூ டியூப்' போன்ற சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    இதேபோல் ஜார்க்கண்டின் முன்னாள் துணை முதல்வர்களான சுதேஷ் மகதோ, சுதிர் மகதோ ஆகியோரும் தோனிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தோனி நன்றி தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai