Enable Javscript for better performance
பிரையன் சகோதரர்கள் சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    
    doublecup

    ஆடவர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் பாப் பிரையன்-மைக் பிரையன் சகோதரர்கள் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்த ஜோடி தங்களின் இறுதிச்சுற்றில் 3-6, 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் குரேஷியாவின் இவான் டோடிக்-பிரேசிலின் மார்செலோ மெலோ ஜோடியை வீழ்த்தியது.

    இதன்மூலம் "ஓபன் எராவில்' தொடர்ச்சியாக 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஜோடி என்ற பெருமை பிரையன் சகோதரர்களுக்கு கிடைத்தது.

    இதற்கு முன்னர் "ஓபன் எராவுக்கு' முந்தைய காலத்தில் ஆஸ்திரேலியாவின் கென் மெக்கிரீகர்-ஃபிராங்க் செட்மான் ஜோடி ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வென்றிருந்தது. அதன்பிறகு 62 ஆண்டுகள் கழித்து தொடர்ச்சியாக 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் பிரையன் சகோதரர்கள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். கடந்த ஒலிம்பிக் போட்டியிலும் பிரையன் சகோதரர்கள்தான் தங்கப் பதக்கம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விம்பிள்டனில் பிரையன் சகோதரர்கள் வென்ற 3-வது பட்டம் இது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இதுவரை அவர்கள் மொத்தம் 15 பட்டங்களை வென்றுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai