Enable Javscript for better performance
மர்மக் காய்ச்சலுக்கு மேலும் ஒரு குழந்தை சாவு- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி அருகேயுள்ள வேப்பனப்பள்ளியில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு வயதுக் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது. இத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு. டீக்கடை நடத்தி வரும் இவருக்கு மனைவி அமராவதி, 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மூன்றாவது குழந்தையான தமயந்தி (1) சில நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை சேர்த்தனர். அங்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும், தீவிர சிகிச்சைக்கு வேறு மருத்துவமனையில் சேர்க்குமாறும் அறிவுறுத்தினர்.

    இதையடுத்து, சனிக்கிழமை குழந்தை தமயந்தியை சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கிருந்து பெங்களூருக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    இதையடுத்து, சேலத்திலிருந்து பெங்களூர் தனியார் மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டது.

    இருப்பினும், அங்கு குழந்தை தமயந்தி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai