Enable Javscript for better performance
வரலாறு படைத்தார் முர்ரே!- Dinamani

சுடச்சுட

    
    cup

    விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே சாம்பியன் பட்டம் வென்றார்.

    லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் ஆன்டி முர்ரே 6-4, 7-5, 6-4 என்ற நேர் செட்களில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.

    இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 77 ஆண்டுகளுக்குப் பிறகு விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற பிரிட்டன் வீரர் என்ற புதிய வரலாற்றைப் படைத்துள்ளார் ஆன்டி முர்ரே.

    முன்னதாக 1936-ல் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் ஃபிரெட் பெர்ரி பட்டம் வென்றுள்ளார். அதன்பிறகு கடந்த 77 ஆண்டுகளில் எந்த பிரிட்டன் வீரரும் பட்டம் வெல்லவில்லை. இப்போது முர்ரே பட்டம் வென்றதன் மூலம் பிரிட்டன் மக்களின் 77 ஆண்டுகால விம்பிள்டன் கனவு நனவாகியுள்ளது.

    ஆன்டி முர்ரேவுக்கு இது 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். முன்னதாக 2012-ல் அமெரிக்க ஓபனில் சாம்பியன் ஆனதே, அவரின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

    கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முர்ரே, அதற்கு முன்னதாக நடைபெற்ற விம்பிள்டன் இறுதிச்சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரிடம் தோல்வி கண்டார். அப்போது கண்ணீரோடு வெளியேறிய முர்ரே, இப்போது பட்டம் வென்று ஆறுதல் தேடிக்கொண்டதோடு, பிரிட்டன் மக்களின் இதயத்திலும் நீங்கா இடம்பிடித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai