Enable Javscript for better performance
ஆசிய குத்துச்சண்டை: தங்கம் வென்றார் சிவ தாபா- Dinamani

சுடச்சுட

    
    siva_thapa

    ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சிவ தாபா தங்கம் வென்றார். இதன்மூலம் இப்போட்டியில் தங்கம் வென்ற இந்தியாவின் இளம் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    இந்தியாவின் தேவேந்திரா சிங், மன்தீப் ஜங்ரா ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், மனோஜ் குமார் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

    ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 56 கிலோ எடைப் பிரிவு இறுதி ஆட்டத்தில் சிவ தாபா, ஜோர்டானின் ஒபாடா அல்கபீயை வீழ்த்தி தங்கம் வென்றார். முன்னதாக அரையிறுதியில் சிவ தாபா, கிர்கிஸ்தானின் மால்பெகோவ் ஓமுர்பெக்கை தோற்கடித்தார்.

    ஆடவர் 49 கிலோ எடைப் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தேவேந்திரா சிங், கஜகஸ்தானின் டெமர்டாஸ் சுஸ்ஸýபோவிடம் தோல்வி கண்டார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.

    மற்றொரு இந்தியரான மன்தீப் ஜங்ராவும் (69 கிலோ) வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர், தனது இறுதி ஆட்டத்தில் கஜகஸ்தானின் டேனியர் எலியூவ்ஸினோவிடம் தோல்வி கண்டார்.

    அதேநேரத்தில் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இந்தியாவின் மனோஜ் குமார் (64 கிலோ), தனது அரையிறுதியில் மங்கோலியாவின் உரஞ்சிமீயா முங்க் எர்டீனிடம் தோல்வி கண்டார். இதனால் மனோஜ் குமாருக்கு வெண்கலப் பதக்கமே கிடைத்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai