Enable Javscript for better performance
இரு டி20, 7 ஒருநாள் ஆட்டம், 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது இந்தியா- Dinamani

சுடச்சுட

    

    இரு டி20, 7 ஒருநாள் ஆட்டம், 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது இந்தியா

    By dn  |   Published on : 09th July 2013 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தென் ஆப்பிரிக்காவுடன் 2 இருபது ஓவர் ஆட்டம், 7 ஒருநாள் ஆட்டம், 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது இந்தியா. இது தவிர 3 பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடுகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடவுள்ளது.

    அதற்கான போட்டி அட்டவணையை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இறுதி செய்து, திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

    அதன்படி இந்திய அணி முதலில் இருபது ஓவர் பயிற்சி ஆட்டம் ஒன்றில், தென் ஆப்பிரிக்க அழைப்பு லெவன் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் நவம்பர் 18-ல் நடைபெறுகிறது.

    அதைத் தொடர்ந்து நவம்பர் 21, 24 ஆகிய தேதிகளில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான இரு சர்வதேச டி20 போட்டிகள் நடைபெறுகின்றன.

    இதன்பிறகு நவம்பர் 27 முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை இவ்விரு அணிகளும் 7 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகின்றன.

    பின்னர் டிசம்பர் 18, 19 மற்றும் டிசம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் இரு பயிற்சி ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்க அழைப்பு லெவன் அணியை சந்திக்கிறது இந்தியா.

    இதையடுத்து டிசம்பர் 26 முதல் ஜனவரி 19 வரை நடைபெறவுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் மோதுகின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai