Enable Javscript for better performance
உலக குண்டு எறிதல்: வெள்ளி வென்றார் இந்திரஜித்- Dinamani

சுடச்சுட

    

    உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதலில் இந்தியாவின் இந்திரஜித் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

    இதன்மூலம் உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    ரஷியாவின் கஸன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் தனது முதல் முயற்சியில் 18.29 மீ. தூரம் எறிந்த இந்திரஜித், 5-வது மற்றும் கடைசி முயற்சியில் 19.70 மீ. தூரம் குண்டு எறிந்து வெள்ளி வென்றார். இதுவே அவரின் சிறந்த தூரமாகவும் அமைந்தது.

    இதே பிரிவில் ரஷிய வீரர்கள் அலெக்சாண்டர் லெஸ்னோய் (20.30 மீ.) தங்கமும், வாலெரி கோகோவ் (19.65 மீ.) வெண்கலமும் வென்றனர்.

    25 வயதான இந்திரஜித், புணேவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 4-வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai