Enable Javscript for better performance
டெஸ்ட் தரவரிசை: 2-வது இடத்தில் இந்தியா- Dinamani

சுடச்சுட

    

    ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான வருடாந்திர தரவரிசையை ஐசிசி திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்கா 135 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலும், இந்தியா 116 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து 112 புள்ளிகளுடனும் 3-வது இடத்திலும் உள்ளன.

    இந்தியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்து வெற்றி கண்டிருந்தாலும், பாகிஸ்தான் (0-3), தென் ஆப்பிரிக்கா (0-2) ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது.

    மேலும் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள நியூஸிலாந்துடனான டெஸ்ட் தொடரை சமன் (0-0) செய்தது. இதன் காரணமாகவே இங்கிலாந்து 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

    எனினும் வரும் புதன்கிழமை தொடங்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் பட்சத்தில் இங்கிலாந்து மீண்டும் 2-வது இடத்தைப் பிடிக்க முடியும்.

    கடந்த மாதம் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தின்போது, மே 1-ம் தேதி வரையிலான காலங்களில் அணியின் செயல்பாடு எப்படியிருந்தது என்பதை அடிப்படையாகக் கொண்டு டெஸ்ட், ஒருநாள் போட்டி, இருபது ஓவர் போட்டிகளின் வருடாந்திர தரவரிசையைக் கணக்கிடுவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இப்போது கடந்த மே 1-ம் தேதி வரையிலான காலத்தில் அணிகளின் செயல்பாட்டை கணக்கில் கொண்டு வருடாந்திர தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai