Enable Javscript for better performance
முத்தரப்புத் தொடர்: 2-வது நாளிலும் மழை!- Dinamani

சுடச்சுட

    

    முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இலங்கை-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான ஆட்டம் 2-வது நாளாக, திங்கள்கிழமையும் மழையால் பாதிக்கப்பட்டது.

    போர்ட் ஆஃப் ஸ்பெயினில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

    இதையடுத்து ஆட்டம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    திங்கள்கிழமையும் மழை பெய்ததால், ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. மேலும் 45 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதல் நாள் எடுத்திருந்த 60 ரன்களுடன் விளையாடத் தொடங்கிய இலங்கை, 32 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai