Enable Javscript for better performance
வாழ்வா, சாவா ஆட்டம்: இந்தியா-இலங்கை இன்று மோதல்- Dinamani

சுடச்சுட

    

    முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணிக்கு இந்த ஆட்டம் வாழ்வா, சாவா ஆட்டமாகும். இந்த ஆட்டத்தில் தோற்றால் இந்தியா போட்டியிலிருந்து வெளியேற நேரிடும்.

    இலங்கை அணிக்கும் இது முக்கியமான ஆட்டமாகும். எனவே அவர்களும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற போராடுவார்கள். முதல் இரு ஆட்டங்களில் தோல்வி கண்ட இந்திய அணி, மூன்றாவது லீக் ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை தோற்கடித்தது.

    அதேபோல் கடந்த ஆட்டத்தில் இலங்கையிடம் கண்ட தோல்விக்கு, இந்த ஆட்டத்தில் இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.

    எனவே இந்தியாவின் இறுதி ஆட்ட வாய்ப்பை வருண பகவானும் தீர்மானிக்க வாய்ப்புள்ளது.

    போட்டி நேரம்: இரவு 7 மணி

    நேரடி ஒளிபரப்பு:

    ஸ்டார் கிரிக்கெட், தூர்தர்ஷன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai