Enable Javscript for better performance
ஆசிய ஜூனியர் பளு தூக்குதல்: இந்தியா சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் பளு தூக்குதல் போட்டியில் இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

    கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் கடந்த 2-ம் தேதி தொடங்கிய இப்போட்டி திங்கள்கிழமை முடிந்தது. இதில் இந்திய வீராங்கனைகள் 3 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர். இதன்மூலம் இந்திய அணி 463 புள்ளிகள் பெற்று அணிகள் பிரிவில் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

    இந்திய மகளிர் அணிக்கு, இந்திய பளுதூக்குதல் சம்மேளன பொதுச்செயலர் ஷகத் யாதவ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

    "சீனா, கொரியா, தாய்லாந்து, கஜகஸ்தான் உள்ளிட்ட பலம் பொருந்திய அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் இந்திய அணி முதலிடம் பெற்றது பெருமைக்குரியது' என்றும் அவர் தெரிவித்தார். சீனாவுக்கு (403) 2-ம் இடமே கிடைத்தது. சீனாவைத் தொடர்ந்து கிர்கிஸ்தான் 359 புள்ளிகள் பெற்று 3-ம் இடத்தைப் பிடித்தது.

    ஆடவருக்கு 4-ம் இடம்: இப்போட்டியில் பங்கேற்ற ஜூனியர் ஆடவர் பிரிவு அணி 408 புள்ளிகள் பெற்று 4-ம் இடத்தைப் பிடித்தது. கிர்கிஸ்தான் 497 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது.

    கஜகஸ்தான் (479), குவைத் (409) அணிகள் முறையே 2 மற்றும் 3-ம் இடங்களைப் பிடித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai