உலக செஸ்: அமைச்சர், அதிகாரிகள் ஆலோசனை
By dn | Published on : 10th July 2013 12:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தமிழகத்தில் நடைபெறுவதை முன்னிட்டு மாநில அரசின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குழுவின் ஒருங்கிணைப்புத் தலைவரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான வைகைச் செல்வன் தலைமையில் இக்கூட்டம் நடந்தது.
இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் இடையே நடைபெறும் உலக செஸ் சாம்பியன் போட்டியானது தமிழகத்தில் நடைபெறும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்தப் போட்டிக்காக ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்போட்டியை சிறப்பாக நடத்தும் வகையில் அதற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளர் முகம்மது நசிமுதீன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ராஜாராமன், நிதித் துறை செயலாளர் கே.சண்முகம் உள்ளிட்ட குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.