Enable Javscript for better performance
உலக துப்பாக்கி சுடுதல்: லஜ்ஜா கோஸ்வாமிக்கு வெள்ளி- Dinamani

சுடச்சுட

    
    spt2

    உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் லஜ்ஜா கோஸ்வாமி, வெள்ளிப் பதக்கம் வென்றார். இப்போட்டித் தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.

    ஸ்பெயினின் கிரனடா நகரில் கடந்த 3-ம் தேதி இப்போட்டி தொடங்கியது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில், குஜராத்தைச் சேர்ந்த கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இப்பிரிவின் இறுதிச்சுற்றில் 454 புள்ளிகள் பெற்றார் கோஸ்வாமி. 443.9 புள்ளிகள் பெற்ற நார்வேயின் மலின் வெஸ்டர்ஹிம் தங்கப் பதக்கத்தையும், 459.1 புள்ளிகள் பெற்ற இத்தாலியின் பெட்ரா சுப்லாஸிங் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

    லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற விஜய் குமார், 25 மீட்டர் ரேபிட் பிரிவுப் போட்டியில் தகுதிச்சுற்றில் தோல்வியைத் தழுவினார். தகுதிச்சுற்றில் அவர் 13-வது இடத்தையே பிடித்தார். மற்ற இந்திய வீரர்களில் பெம்பா தமங் 36-வது இடத்தையும், மகேந்திர சிங் 42-வது இடத்தையும் பிடித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai