Enable Javscript for better performance
தொடர் தோல்வி எதிரொலி: ஹாக்கி பயிற்சியாளர் நாப்ஸ் நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தொடர் தோல்வி எதிரொலி: ஹாக்கி பயிற்சியாளர் நாப்ஸ் நீக்கம்

    By dn  |   Published on : 10th July 2013 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    noppes

    இந்திய ஹாக்கி அணி பயிற்சியாளரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மைக்கேல் நாப்ஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

    இந்திய ஆடவர் ஹாக்கி அணி, பல ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வந்ததைத் தொடர்ந்து நாப்ஸ் நீக்கப்பட்டுள்ளார்.

    ""ஒப்பந்தக் காலம் முடியும் முன்பே, ஹாக்கி பயிற்சியாளர் நாப்ஸ் நீக்கப்பட்டார். அவர் தானாகவே முன்வந்து பயிற்சியாளர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்'' என ஹாக்கி அணியை நிர்வகித்து வரும் அமைப்பான ஹாக்கி இந்தியாவின் பொதுச் செயலர் நரீந்தர் பத்ரா தெரிவித்தார்.

    நாப்ஸின் விருப்பத்தை இந்திய விளையாட்டு ஆணையத்திடம் ஹாக்கி இந்தியா தெரிவித்தது.

    "அவருக்கு ஒரு மாதம் அவகாசம் அளித்து நோட்டீஸ் அளிக்கப்பட்டது. நாப்ஸýக்கு அளிக்கப்பட்ட கால அவகாசம் திங்கள்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து அவர் நீக்கப்பட்டதாக' இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் ஜீஜி தாம்சன் தெரிவித்தார்.

    ஒப்பந்தக் காலம் முடிவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னரே நாப்ஸ் நீக்கப்பட்டுள்ளார். இவர், ஒப்பந்தம் முடியும் முன்பு நீக்கப்பட்ட நான்காவது வெளிநாட்டு பயிற்சியாளராவார்.

    நாப்ஸ் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அணியின் பயிற்சி மேலாளராக உள்ள ரோலன்ட் அல்டமன்ஸ் பயிற்சியாளராக நீடிப்பார். அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்குள் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்றும் பத்ரா தெரிவித்துள்ளார்.

    இந்திய அணியின் பயிற்சியாளாரக 2011-ம் ஆண்டில் நாப்ஸ் பொறுப்பேற்றார். அவர் 5 ஆண்டு காலம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பயிற்சியாளர் பதவியில் இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள நாப்ஸ், வரும் 14-ம் தேதி இந்தியாவுக்கு வர உள்ளார்.

    "உரிய மரியாதையுடன் நாப்ஸ் வெளியேற்றப்படுவார்' என்று பத்ரா தெரிவித்தார்.

    ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளராக எம்.கே. கெüசிக்கை நியமிக்க இந்திய விளையாட்டு ஆணையத்திடம் ஹாக்கி இந்தியா அமைப்பு செவ்வாய்க்கிழமை பரிந்துரை செய்தது.

    "இது குறித்து முடிவெடுக்க சிறிது கால அவகாசம் தேவை. விளையாட்டு அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் இறுதி முடிவு எடுக்கப்படும்' என்று ஜீஜி தாம்சன் கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai