Enable Javscript for better performance
மேட்ச் பிக்ஸிங்: இலங்கை நடுவர்கள் 2 பேருக்கு தடை- Dinamani

சுடச்சுட

    

    பணம் கொடுத்தால் சாதகமான தீர்ப்பு அளிக்க சம்மதம் தெரிவித்த இலங்கை நடுவர்கள் 2 பேருக்கு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

    இலங்கை பிரீமியர் லீக் போட்டியில் வீரர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவதாகவும், மைதானத்தின் தன்மை குறித்து தகவல் அளிக்க 6 நடுவர்கள் முன்வந்ததாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குற்றம் சாட்டப்பட்டது. தொலைக்காட்சி நடத்திய அதிரடி நடவடிக்கையில் இந்த உண்மை தெரிய வந்தது.

    இலங்கையைச் சேர்ந்த சகரா கல்லகி, மெüரிஸ் டி லா சில்வா மற்றும் காமினி திஸ்ஸநாயகா, பாகிஸ்தானைச் சேர்ந்த நதீம் கெüரி மற்றும் அனீஸ் சித்திக், வங்கதேசத்தைச் சேர்ந்த நதீர் ஷா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    இலங்கையைச் சேர்ந்த நடுவர்கள் மீதான குற்றச்சாட்டை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விசாரித்து வந்தது. தங்கள் மீதான குற்றச்சாட்டை நடுவர்கள் மறுத்து வந்தனர்.

    இந்நிலையில், கல்லகி மற்றும் மெüரிஸ் டி லா சில்வா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு முறையே 10 மற்றும் 13 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதேசமயம், திஸ்ஸநாயகாவின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்பட்டார். எனினும் அவர், தனது சீனியாரிட்டியை இழந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai