Enable Javscript for better performance
மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தியது இலங்கை- Dinamani

சுடச்சுட

    

    முத்தரப்புத் தொடரில் டக்வொர்த்-லீவிஸ் முறைப்படி மேற்கிந்தியத் தீவுகள் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை.

    போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இலங்கை அணி முதலில் பேட் செய்து கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    அப்போது அந்த அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்திருந்தது. திங்கள்கிழமை இந்த ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

    ஆனால், மழையினால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் போட்டி 41 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. 41 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு இலங்கை அணி 219 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சங்ககாரா 90 ரன்கள்

    எடுத்தார்.

    பின்னர் டக்வொர்த்-லீவிஸ் முறைப்படி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 41 ஓவர்களில் 230 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    அணியில் பிராவோ, சிம்மன்ûஸத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதனால் அந்த அணி 41 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. அதிகபட்சமாக பிராவோ 70 ரன்கள் எடுத்தார். இலங்கைத் தரப்பில் மேத்யூஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

    90 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்த சங்ககாராவுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai