Enable Javscript for better performance
ரஞ்சிக் கோப்பை போட்டிகள் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    2013-14-ம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பிரிவு வாரியாக இடம் பெற்றுள்ள அணிகள், அணிகள் மோதும் ஆட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

    இப்போட்டி 9 சுற்றுகளாக நடைபெற உள்ளது. நடப்புச் சாம்பியன் மும்பை, தனது முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஹரியாணா அணியுடன் மோதவுள்ளது. இந்த ஆட்டம் வரும் அக்டோபர் 27-ம் தேதி தொடங்குகிறது.

    ரஞ்சிப் போட்டியில் விளையாடும் அணிகள் "ஏ', "பி', மற்றும் "சி' என 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

    ஏ பிரிவு: மும்பை, பஞ்சாப், குஜராத், தில்லி, கர்நாடகம், ஹரியாணா, ஒடிசா, விதர்பா மற்றும் ஜார்க்கண்ட்.

    பி பிரிவு: செüராஷ்டிரம், சர்வீசஸ், உத்தரப் பிரதேசம், ரயில்வே, பரோடா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான்.

    சி பிரிவு: ஹைதராபாத், மகாராஷ்டிரம், ஆந்திரம், அசாம், கேரளம், கோவா, இமாசலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் திரிபுரா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai