Enable Javscript for better performance
இந்திய ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளராக கெளஷிக் நியமனம்- Dinamani

சுடச்சுட

    
    kaushik

    இந்திய ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளராக மகாராஜ் கிரிஷன் கெளஷிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர், 1980-ல் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்தவர் ஆவார்.

    இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மைக்கேல் நாப்ஸ், கடந்த சில தினங்களுக்கு முன்பு நீக்கப்பட்டார்.

    அதைத் தொடர்ந்து அணியின் சிறப்பான செயல்பாட்டுக்கான இயக்குநர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் ஏற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு உதவும் வகையில் புதிய பயிற்சியாளராக கெüஷிக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் தேர்வு செய்யப்படும் வரையில், அப்பதவியில் ஓல்ட்மான்ஸ் நீடிப்பார்.

    பெங்களூரில் உள்ள "சாய்' மையத்தில் வரும் 16-ம் தேதி தொடங்கவுள்ள இந்திய அணியின் பயிற்சி முகாமின்போது, இந்திய அணியோடு இணைகிறார் புதிய பயிற்சியாளரான கெüஷிக்.

    மலேசியாவின் ஈபோ நகரில் ஆகஸ்ட் 24-ம் தேதி தொடங்கவுள்ள ஆசிய கோப்பை போட்டிதான், கெüஷிக்கிற்கு முதல் போட்டியாகும். நெதர்லாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் தகுதிச்சுற்றான ஆசிய கோப்பை போட்டியில் கெüஷிக்கின் செயல்பாடு எப்படி அமைகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்துப் பேசிய கெüஷிக், "பயிற்சியாளர் பதவி கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எந்தவொரு வீரருக்குமே சொந்த நாட்டில் பயிற்சியாளர் பதவி கிடைப்பது மிகப்பெரிய கெüரவமாகும். பல்வேறு அணிகளுக்கு பயிற்சியளித்திருக்கிறேன். இந்திய அணியின் வெற்றிக்கு என்னால் முடிந்தவரை பாடுபடுவேன். உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு இந்திய அணி எப்படி தகுதி பெற வைப்பது என்பது குறித்து, அணி நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து, அதற்கான தீர்வை கண்டறியப்படும்' என்றார்.

    ஆசிய கோப்பை போட்டி குறித்துப் பேசிய அவர், "உலகக் கோப்பை போட்டியைவிட, ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி இருக்கும். எனினும் நெருக்கடிக்கு மத்தியிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவோம்' என்றார்.

    கெüஷிக், ஹரியாணா மாநில விளையாட்டுத் துறை இயக்குநராக பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றவர். இதற்கு முன்னர் இந்திய சீனியர் ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு பயிற்சியளித்துள்ளார். அவருடைய பயிற்சியின் கீழ் 1998-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றுள்ளது. இதேபோல் 2006-ல் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய மகளிர் அணிக்கும் கெüஷிக்கே, பயிற்சியாளராக இருந்தார். இவருக்கு, 1998-ல் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai