Enable Javscript for better performance
சிடில், பட்டின்சன் வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து- Dinamani

சுடச்சுட

    
    pieter

    ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் பீட்டர் சிடில் 5 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் பட்டின்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்தை சரிவுக்குள்ளாக்கினர்.

    இங்கிலாந்தின் நாட்டிங்காமில் புதன்கிழமை தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக், பேட்டிங்கை தேர்வு செய்தார். குக்கும், ஜோ ரூட்டும் இங்கிலாந்தின் இன்னிங்ûஸத் தொடங்கினர்.

    கடந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த குக், 13 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பட்டின்சன் பந்துவீச்சில் வீழ்ந்தார்.

    இதையடுத்து ஜொனாதன் டிராட் களம்புகுந்தார். மறுமுனையில் ஜோ ரூட் 30 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த கெவின் பீட்டர்சன் 14 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அந்த அணி 124 ரன்களை எட்டியபோது சிடில் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார் டிராட். அவர் 9 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்தார்.

    இதன்பிறகு வந்தவர்களில் இயான் பெல் 25, பேர்ஸ்டோவ் 37, ஸ்டூவர்ட் பிராட் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அந்த அணி 59 ஓவர்களில் 215 ரன்களுக்கு சுருண்டது.

    ஆஸ்திரேலிய தரப்பில் பீட்டர் சிடில் 14 ஓவர்களில் 50 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பட்டின்சன் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    ஆஸ்திரேலியா தடுமாற்றம்: பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 9.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்திருந்தது. கிறிஸ் ரோஜர்ஸ் 7, ஸ்டீவன் ஸ்மித் 5 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டீவன் ஃபின் 2 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai