Enable Javscript for better performance
\\\"பெடா\\\'வுக்கு உதவுவதற்காக சானியாவின் டென்னிஸ் மட்டை ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    "பெடா'வுக்கு உதவுவதற்காக சானியாவின் டென்னிஸ் மட்டை ஏலம்

    By dn  |   Published on : 11th July 2013 05:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விலங்குகள் நல ஆர்வலர்கள் அமைப்பிற்கு (பெடா) இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தனது கையெழுத்திட்ட டென்னிஸ் மட்டையை (ராக்கெட்) வழங்கியுள்ளார்.

    இந்த ராக்கெட் ஆன்லைனில் ஏலம் விடப்படுகிறது. இதில் கிடைக்கும் நிதி "பெடா'வின் ஆதரவு பெற்ற அமைப்பான "விலங்குகள் ரஹாட்' அமைப்புக்கு வழங்கப்படவுள்ளது.

    இது தொடர்பாக சானியா கூறுகையில், "இந்த ராக்கெட்டை ஏலம் விட்டு நிதி திரட்டுவதன் மூலம் சர்க்கரை ஆலைகளில் வண்டி இழுக்கப் பயன்படுத்தப்படும் குதிரைகள் மற்றும் காளைகளை காப்பாற்ற முடியும். இதேபோல் பல்வேறு வேலைகளுக்காக பயன்படுத்தப்படும் கழுதைகளையும் காப்பாற்ற முடியும்' என்றார்.

    குதிரை, காளை மாடுகள், கழுதைகள் ஆகியவை பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் மாட்டு வண்டி பந்தயங்களின்போது காளைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன. இதுபோன்றவற்றிலிருந்து காளைகள் உள்ளிட்ட விலங்குகளை காப்பாற்றுவதற்காக "விலங்குகள் ரஹாட்' அமைப்பு, 2003-ம் ஆண்டு நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai