Enable Javscript for better performance
முத்தரப்புத் தொடர் இறுதி ஆட்டம்: இந்தியா-இலங்கை இன்று பலப்பரீட்சை- Dinamani

சுடச்சுட

    

    முத்தரப்புத் தொடர் இறுதி ஆட்டம்: இந்தியா-இலங்கை இன்று பலப்பரீட்சை

    By dn  |   Published on : 11th July 2013 05:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    spt

    போர்ட் ஆஃப் ஸ்பெயினில் வியாழக்கிழமை நடைபெறும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.

    கடந்த மாதம் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணி, இந்தப் போட்டியிலும் கோப்பையை வெல்லும் முனைப்போடு களமிறங்குகிறது. அதேநேரத்தில் இலங்கை அணி, கடந்த ஆட்டத்தில் இந்தியாவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கு முனைப்பில் களம் காண்கிறது.

    முத்தரப்புத் தொடரின் முதல் இரு ஆட்டங்களில் தோற்ற இந்திய அணி, அடுத்த இரு ஆட்டங்களிலும் போனஸ் புள்ளியோடு வெற்றி கண்டு இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. அதேபோன்று இந்த ஆட்டத்திலும் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    களமிறங்குகிறார் தோனி?  இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை ஷிகர் தவன்-ரோஹித் சர்மா ஜோடி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறது. மிடில் ஆர்டரில் கேப்டன் கோலி, ரெய்னா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

    தசைப்பிடிப்பு காரணமாக கடந்த ஆட்டங்களில் விளையாடாத கேப்டன் தோனி, இந்த ஆட்டத்தில் களமிறங்குவார் என்று தெரிகிறது. எனினும் அவர் விளையாடுவாரா, இல்லையா என்பது டாஸ் போடுவதற்கு முன்னதாகவே முடிவு செய்யப்படும் என்று இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தோனி இடம்பெறும் பட்சத்தில், முரளி விஜய் நீக்கப்படுவார்.

    பந்துவீச்சைப் பொறுத்தவரையில் இளம் வீரர் புவனேஸ்வர் குமார், இந்திய அணியின் பெரும் பலமாகத் திகழ்கிறார். இதுவரை 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

    இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் இந்தியாவுக்கு வலு சேர்க்கின்றனர். சுழற்பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜா கூட்டணியை நம்பியுள்ளது இந்தியா.

    இலங்கை அணி, மூத்த வீரர்களான ஜெயவர்த்தனா, குமார் சங்ககாரா ஆகியோரையே பெரிய அளவில் நம்பியுள்ளது. கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிரான முக்கிய ஆட்டங்களில் ஜெயவர்த்தனாவும், சங்ககாராவும் சிறப்பாக விளையாடி ரன் குவித்துள்ளனர். இதேபோல் உபுல் தரங்கா, தினேஷ் சண்டிமால், திரிமன்னே, கேப்டன் மேத்யூஸ் ஆகியோரும் அந்த அணியின் பேட்டிங்கில் முக்கியப் பங்கு வகிப்பார்கள்.

    பந்துவீச்சில் மலிங்கா, குலசேகரா, ஹெராத் ஆகியோரை நம்பியுள்ளது இலங்கை.

     

    இதுவரை...

    இவ்விரு அணிகளும் இதுவரை 142 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளன.

    அதில் இந்தியா 77 ஆட்டங்களிலும், இலங்கை 53 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்துள்ளன. 11 ஆட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai