Enable Javscript for better performance
வெற்றியைக் கொண்டாட நேரமில்லை: சிவ தாபா- Dinamani

சுடச்சுட

    

    உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டியே அடுத்த இலக்கு; அதனால் வெற்றியைக் கொண்டாட தற்போது நேரமில்லை என்று ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற சிவ தாபா தெரிவித்துள்ளார்.

    ஆசிய குத்துச்சண்டையில் பங்கேற்ற இந்திய அணி ஜோர்டானிலிருந்து புதன்கிழமை நாடு திரும்பியது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சிவ தாபா கூறியது:

    உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. அதனால் தற்போது வெற்றியைக் கொண்டாட நேரமில்லை. 3 அல்லது 4 நாள்களுக்குப் பிறகு, உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக பாட்டியாலாவில் நடைபெறும் தேசிய பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளேன். வெற்றியை எப்போது வேண்டுமானாலும் கொண்டாடலாம்.

    உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக தீவிரமாக பயிற்சி மேற்கொள்ள வேண்டிய நேரமிது. நம்மால் முடிந்த அளவுக்கு பயிற்சியை மேற்கொண்டு உலக குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai