Enable Javscript for better performance
ஆஸ்திரேலியாவை மீட்ட ஆஷ்டன்!- Dinamani

சுடச்சுட

    
    spt7

    ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து தடுமாறியபோது, கடைசி வீரராக களமிறங்கிய ஆஷ்டன் அகர் 98 ரன்கள் குவித்து அந்த அணியை மீட்டார். இதன்மூலம் 11-வது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் குவித்தவர் என்ற உலக சாதனையை படைத்தார் ஆஷ்டன்.

    இங்கிலாந்தின் நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இப்போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 215 ரன்களுக்கு சுருண்டது.

    இதையடுத்து 2-வது இன்னிங்ûஸ ஆடிய ஆஸ்திரேலியா, முதல் நாளான புதன்கிழமை ஆட்டநேர முடிவில் 21 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டீவன் ஸ்மித் 38, பில் ஹியூஸ் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    சரிவுக்குள்ளான ஆஸ்திரேலியா: 2-வது நாளான வியாழக்கிழமை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித் 79 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு அந்த அணி சரிவுக்குள்ளானது. ஒருபுறம் பில் ஹியூஸ் போராட, மறுமுனையில் பிராட் ஹாடின், பீட்டர் சிடில் ஆகியோர் தலா ஒரு ரன்னுக்கும், மிட்செல் ஸ்டார்க் 0, பட்டிசன்சன் 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா 33.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து தடுமாறியது.

    அதிரடி ஆஷ்டன்: இதையடுத்து பில் ஹியூஸýடன் இணைந்தார் கடைசி வீரரான ஆஷ்டன் அகர். ஆஸ்திரேலியாவை சுருட்டிவிடலாம் என்று நினைத்திருந்த இங்கிலாந்து பெüலர்களை பந்தாடினார் அறிமுக வீரரான ஆஷ்டன். அதிரடியாக விளையாடிய அவர், 50 பந்துகளில் அரைசதம் கண்டார்.

    ஆஷ்டன் தொடர்ந்து வேகம் காட்ட, ஹியூஸ் அவருக்குப் பக்கபலமாக விளையாடினார். இதனால் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றது.

    அந்த அணி 280 ரன்களை எட்டியபோது, சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஷ்டன், 98 ரன்களில் ஆட்டமிழக்க, மைதானமே அதிர்ச்சியில் உறைந்தது.

    101 பந்துகளைச் சந்தித்த ஆஷ்டன் 2 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் எடுத்தார். பில் ஹியூஸ் 131 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளையும், ஸ்டீவன் ஃபின், கிரீம் ஸ்வான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    வழக்கமாக இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் ஆஷஸ் போன்ற விறுவிறுப்பான தொடர்களில் எதிரணி வீரர்களுக்கு இங்கிலாந்து ரசிகர்களின் பாராட்டு கிடைப்பது அரிதானதாகும்.

    ஆனால் ஆஷ்டன் 98 ரன்கள் எடுத்து வெளியேறியபோது மைதானத்தில் இருந்து இங்கிலாந்து ரசிகர்களும் கரகோஷம் எழுப்பி அவரை பாராட்டினர்.

    இங்கிலாந்து-80/2: பின்னர் 2-வது இன்னிங்ûஸ ஆடிய இங்கிலாந்து ஆட்டநேர முடிவில் 43 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்திருந்தது.

    அலாஸ்டர் குக் 37, பீட்டர்சன் 35 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 15 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது இங்கிலாந்து.

    ஆஷ்டன் "டபுள்ஸ்'

    இந்த ஆட்டத்தில் 98 ரன்கள் குவித்த ஆஷ்டன், ஆஸ்திரேலியாவை பெரும் சரிவிலிருந்து மீட்டதோடு, அறிமுகப் போட்டியிலேயே இரட்டை உலக சாதனை படைத்து அசத்தினார்.

    இந்த ஆட்டத்தில் அவர் அரைசதம் கடந்தபோது, சர்வதேச அளவில் அறிமுகப் போட்டியில் 11-வது வீரராக களமிறங்கி, அரைசதம் கண்ட முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அவர் 98 ரன்கள் எடுத்ததன் மூலம் 11-வது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் குவித்தவர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரரானார்.

    இதற்கு முன்பு, மேற்கிந்தியத் தீவுகளின் டினோ பெஸ்ட், கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக எடுத்த 95 ரன்களே, 11-வது வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் சாதனையாக இருந்தது. கிரிக்கெட் வரலாற்றில் 11-வது வீரராக களமிறங்கி சதம் கண்ட முதல் வீரர் என்ற மகத்தான சாதனை படைக்கும் வாய்ப்பை 2 ரன்களில் இழந்தாலும், ஹியூஸýடன் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 33 ஓவர்களில் 163 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவை சரிவிலிருந்து மீட்டார் ஆஷ்டன்.

    இதன்மூலம் கடைசி விக்கெட்டுக்கு அதிக ரன் குவித்த ஜோடி என்ற உலக சாதனையை ஆஷ்டன்-ஹியூஸ் ஜோடி பெற்றுள்ளது. முன்னதாக 1972-73-ல் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் நியூஸிலாந்தின் பிரையன் ஹேஸ்டிங்ஸ்-ரிச்சர்ட் காலிஞ்ச் ஜோடியும், 1997-98-ல் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தானின் அசார் மெஹ்மூத்-முஷ்டாக் அஹமது ஜோடியும் தலா 151 ரன்கள் சேர்த்ததே கடைசி விக்கெட்டுக்கு ஒரு ஜோடி எடுத்த அதிகபட்ச ரன் சாதனையாக இருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai