Enable Javscript for better performance
ஏடிபி டென்னிஸ் பிரகாஷ் அமிர்தராஜ் தோல்வி- Dinamani

சுடச்சுட

    
    amirtaraj

    "ஹால் ஆஃப் ஃபேம்' ஏடிபி டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் இந்தியாவின் பிரகாஷ் அமிர்தராஜ் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

    செüத் வேல்ஸின் நியூபோர்ட் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் 2-வது சுற்றில் பிரகாஷ் 2-6, 1-6 என்ற நேர் செட்களில் முன்னாள் முதல் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் லெய்டன் ஹெவிட்டிடம் தோல்வி கண்டார். இந்த ஆட்டத்தில் ஹெவிட் 6 முறை பிரகாஷின் சர்வீஸ்களை முறியடித்தார்.

    காலிறுதியில் திவிஜ் ஜோடி: ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் திவிஜ் சரண்-குரேஷியாவின் இவோ கார்லோவிக் ஜோடி 4-6, 7-6 (1), 11-9 என்ற செட் கணக்கில் உக்ரைனின் இலியா மார்ச்சென்கோவா-டெனிஸ் மூல்சனோவ் ஜோடியை வீழ்த்தியது.

    இதன்மூலம் காலிறுதிக்கு முன்னேறியுள்ள திவிஜ் ஜோடி, அந்த சுற்றில் கனடாவின் அடில் ஷமாஸ்டின்-ஆஸ்திரேலியாவின் ஜான் பாட்ரிக் ஸ்மித் ஜோடியை சந்திக்கிறது. முதல் சுற்றில் வெற்றி கண்டதன் மூலம், ஏடிபி டென்னிஸ் போட்டியில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார் திவிஜ் சரண்.

    சமீபத்தில் முடிவடைந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பூரவ் ராஜாவுடன் இணைந்து பங்கேற்ற திவிஜ் சரண், முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai