ஐ-லீக் கால்பந்து: பெங்களூர் அணியில் ராபின் சிங்
By dn | Published on : 12th July 2013 05:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
இந்திய கால்பந்து வீரர் ராபின் சிங்கை, பெங்களூரைச் சேர்ந்த ஐ-லீக் கால்பந்து அணியான ஜெ.எஸ்.டபிள்யூ. ஸ்போர்ட்ஸ், தங்கள் அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது.
கடந்த ஆண்டு தில்லியில் நடைபெற்ற நேரு கோப்பை போட்டியின்போது இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ராபின் சிங், பெங்களூர் அணியுடனான ஒப்பந்தம் குறித்து கூறியது:
இந்த கிளப்புடன் நான் ஒப்பந்தம் செய்து கொண்டதற்காக பல காரணங்கள் உள்ளன. இந்த அணி இளைஞர்கள் அணி நிறைந்தது.
இந்த கிளப் அணி தொழில் முறையில் சரியாக உருவாக்கப்பட்டு வருகிறது. பயிற்சி முகாமின் ஒரு பகுதியாக இங்கு வந்தேன். இங்குள்ள சூழல்களில் மிகவும் ரசித்து விளையாடினேன். இந்த அணியில் நானும் ஒருவனாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.
டாடா கால்பந்து கிளப்பால் உருவாக்கப்பட்டவரான ராபின் சிங், ஐ-லீக் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணிக்காக 3 ஆண்டுகள் விளையாடிய பிறகு, தற்போது பெங்களூர் அணிக்காக களம் காணவிருக்கிறார்.
தஜிகிஸ்தான் அணியுடனான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள உத்தேச இந்திய அணியிலும் இவர் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.